Monday, December 18, 2006

வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணி !

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா சற்று நேரம் முன்பு, வெற்றி பெற்று வரலாறு படைத்தது !!! தென்னாபிரிக்காவில் நடந்த டெஸ்ட போட்டிகளில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது ! இதற்கு முன் நடைபெற்ற ஒரு நாள் பந்தயங்களில் இந்திய அணி சந்தித்த மோசமான தோல்விகளை வைத்துப் பார்க்கும்போது, இவ்வெற்றி ஒரு மகத்தான வெற்றி என்று நிச்சயம் கூற முடியும். அதுவும் ஓர் அணியாக விளையாடி, இந்த உன்னத வெற்றிக்கு அணி வீரர்கள் பலரும் பங்களித்தனர் என்றால் அது மிகையில்லை.

இன்று சற்று உடல் நலக் குறைவால் அலுவலகம் செல்ல முடியாமல் போனது கூட நல்லது தான் :) டிவியில் இந்திய வெற்றியையும், இந்திய அணியினரின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் பார்த்து ரசிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே ! எப்போதாவது தானே இது போன்ற தருணங்கள் காணக் கிடைக்கிறது ;-)

இந்த வெற்றிக்கு அணி வீரர்கள் பலரும் காரணமாய் இருந்தனர். இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸில் சச்சின் 44 ரன்களும், கங்குலி 51 ரன்களும் எடுத்து, இந்தியா 249 ரன்கள் சேர்க்க உதவினர். VRV சிங்கும் இன்னிங்க்ஸின் இறுதியில் கங்குலிக்கு துணையாக நின்று 29 ரன்கள் எடுத்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும் !!!

தென்னாபிரிக்க அணி பேட் செய்தபோது, ஓர் இளஞ்சிங்கத்தை போல் பந்து வீசிய ஸ்ரீசாந்த் 5 விக்கெட்டுகளையும், அனுபவமிக்க ஜாகீரும், அனில் கும்ப்ளேயும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி தென்னாபிரிக்க அணியை 84 ரன்களுக்கு சுருட்டினார்கள் ! சேவாக் மற்றும் லஷ்மண் ஆகியோர் தலா இரண்டு அருமையான காட்ச்களைப் பிடித்தனர்.

இந்தியாவின் 2-வது இன்னிங்க்ஸில் சேவாக் அதிரடியாக ஆடி 33 ரன்களும், கங்குலி 25 ரன்களும், லஷ்மண் நிதானமாக ஆடி 73 ரன்களும் எடுத்தனர். இன்னிங்க்ஸின் இறுதியில் ஜாகீர், லஷ்மணுக்குத் துணையாக நின்று ஆடி, 37 ரன்கள் எடுத்தது ஆட்டத்தின் சிறப்பு அம்சம் ! இந்தியா 236 ரன்கள் எடுத்து, தென்னாபிரிக்காவுக்கு 402 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

தென்னாபிரிக்கா, இரண்டாவது இன்னிங்க்ஸில் 278 ரன்கள் மட்டுமே எடுத்து, 123 ரன்கள் வித்தியாசத்தில், நான்காவது நாள் உணவு இடைவேளை முன்பாகவே தோல்வியைத் தழுவியது ! ஸ்ரீசாந்த், ஜாகீர், கும்ப்ளே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அனில் கும்ப்ளே, போலக்கும், பிரின்ஸ¤ம் கூட்டு சேர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நேரத்தில், அவ்விருவரையும், clean bowled செய்து தான் ஒரு மாஸ்டர் பந்து வீச்சாளர் என்பதை மறுபடி ஒரு முறை நிரூபித்தார் !! பிரின்ஸ் 97 ரன்கள் எடுத்து, சதத்தை நழுவ விட்டார். 2-வது இன்னிங்க்ஸிலும், சேவாக் இரண்டு நல்ல காட்ச்கள் பிடித்தார்.

இந்த அற்புதமான இந்திய வெற்றிக்கு, இளமையும், அனுபவமும் ஒரு சேர நின்று வழி வகுத்தன என்று சந்தோஷமாகக் கூறலாம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 271 ***

10 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

As usual, my comment will be the first comment :)))

Hariharan # 03985177737685368452 said...

பேருக்குத்தான் டீம்னு சொல்லிக்கிறதெல்லாம். எப்பவாச்சும் மட்டுமே டீம் வொர்க் செஞ்சு விளையாடுறது இப்படி.

எனிவே மாட்ச் பிக்ஃசிங் நடந்ததுன்னு ரெண்டுவருஷம் கழிச்சு யாரும் புக் எழுதாம இருக்கணும்.

கலோனியல் கேம்! நான் கிரிக்கெட்டைப் பார்ப்பதை சில பல வருடங்களாக விட்டு விட்டேன்! :-))

enRenRum-anbudan.BALA said...

Hariharan,

அப்பப்ப ஜெயிக்கும்போது பாராட்டணும் இல்லையா :)) எனக்கும் கிரிக்கெட்டுக்கும் பூர்வ ஜென்ம பந்தம் ஒன்று இருக்கிறது போல உள்ளது. பார்க்காம இருக்க முடியலை ;-)

//கலோனியல் கேம்! நான் கிரிக்கெட்டைப் பார்ப்பதை சில பல வருடங்களாக விட்டு விட்டேன்! :-))
//
What a great patriot you are ;-)
எ.அ.பாலா
************************************

said...

congrats to Indian team ....

மு.கார்த்திகேயன் said...

ரொம்ப நாள் கழிச்சு இப்படி ஒரு சந்தோசமான சேதிங்க பாலா

said...

I am aasath

Don't flame the game Mr. Hariharan.

Please criticise the ICC and Players as well as the Fans.

We required the patriotic players. How it is possible while they wear the dress and shoes of the Foreign company's brand.

-AASATH

முத்துகுமரன் said...

கூட்டுமுயற்ச்சியே வெற்றியைத் தரும் என்பதை இந்த அணியினர் இப்போது உணர்ந்திருப்பார்கள். இது தொடரவேண்டும். வாசிம் ஜாபரை கழட்டி விட்டு அந்த இடத்திற்கு பதானை கொண்டு வருதல் நலம்.ஐந்தாவது பந்து வீச்சாளர் கிடைத்த மாதிரி இருக்கும்.

enRenRum-anbudan.BALA said...

Thanks, Muthu kumaran

//வாசிம் ஜாபரை கழட்டி விட்டு அந்த இடத்திற்கு பதானை கொண்டு வருதல் நலம்.ஐந்தாவது பந்து வீச்சாளர் கிடைத்த மாதிரி இருக்கும்.
//
You are SPOT ON :)

enRenRum-anbudan.BALA said...

Thanks, மு.கார்த்திகேயன்

enRenRum-anbudan.BALA said...

Thanks, aasath !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails